டாஸ்மாக் கடையில் மதுவிற்ற பணம் குறைவாக இருந்தது கண்டுபிடிப்பு
அதிகாரிகள் ஆய்வின் போது டாஸ்மாக் கடையில் மது விற்ற பணம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மேற்பார்வையாளரிடம் உடனடியாக ரூ.5 ஆயிரம் செலுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நாகர்கோவில்,
அதிகாரிகள் ஆய்வின் போது டாஸ்மாக் கடையில் மது விற்ற பணம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மேற்பார்வையாளரிடம் உடனடியாக ரூ.5 ஆயிரம் செலுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
டாஸ்மாக் கடை
குமரி மாவட்டத்தில் 110 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் 90 நாட்கள் வரை இருப்பு இருக்கும் மதுபான வகை மற்றும் விற்பனை குறித்து கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
இதற்காக தாலுகா வாரியாக கடை மேற்பார்வையாளர்கள் வேறு தாலுகாக்களில் உள்ள கடைகளுக்கு சென்று 3 மாதங்களில் தினசரி விற்ற மதுபான வகை குறித்தும், இருப்பு இருக்கும் மதுபானங்கள் குறித்தும் கணக்கெடுத்து வருகிறார்கள். 90 நாட்களை நெருங்கும் மதுபான வகைகளை உடனடியாக விற்று தீர்க்கும் வகையில் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது.
அதிகாரிகள் ஆய்வு
விற்பனையாகாமல் இருப்பில் உள்ள மதுபாட்டில்களை வேறு கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. கணக்கெடுப்பின் போது இருப்பு வித்தியாசம் ஏற்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே வடசேரி பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு மதுக்கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது அங்கு மதுவிற்ற பணம் ரூ.5 ஆயிரம் குறைவாக இருந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த பணத்தை உடனடியாக செலுத்தும்படி கடை மேற்பார்வையாளருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.