கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் என பேரவை கூட்டத்தில் தீர்மானம்

கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் என பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-06-17 10:41 GMT

கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் என பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் நேற்று தச்சம்பட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆரோக்கியமேரி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலாயுதம் வரவேற்றார்.

இதில் கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் முருகன், மாநில பொதுச் செயலாளர் துரைசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும். கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். உடல் பாதுகாப்புடன் கூடிய சீருடை, ரப்பர் ஷு இலவசமாக வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே வழங்க வேண்டும்.

குழு காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும். பிரிமியம் தொகையை அரசும், ஆலை நிர்வாகமே செலுத்திட வேண்டும். கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடும் போது விஷ பூச்சிகள் மற்றும் பாம்பு கடித்து தொழிலாளர்கள் மரணமடைந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் குடும்ப நிதியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து திருவண்ணாமலை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் கரும்பு வெட்டு தொழிலாளர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்