வாணியம்பாடியை சிறப்பு நிலை நகராட்சியாக மாற்ற வேண்டும்

வாணியம்பாடியை சிறப்பு நிலை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-03-30 18:24 GMT

வாணியம்பாடி நகர மன்ற கூட்டம் மன்ற அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி, நகர மன்ற உறுப்பினர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சங்கர் வரவேற்றார்.

கூட்டத்தில் தேர்வு நிலை நகராட்சியாக இருக்கும் வாணியம்பாடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்பது உட்பட 2 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நகரமன்ற உறுப்பினர்கள் சாரதி குமார், சித்ரா, அருள், ரஜினி, ஹாஜியார் ஜகீர் அகமது, நாசீர் கான், பஷீர் அஹமத், பி.முஹம்மத் அனீஸ், பிரகாஷ், ஆஷா பிரியா, பத்மாவதி உள்பட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்