உடன்குடியில்2 மணி நேரம் பலத்த மழை

உடன்குடியில்2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

Update: 2022-10-10 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி பகுதியில் கடந்த ஒரு வாரமாக பகலில் கடும் வெயில் காணப்பட்டது. நண்பகலில் தெருக்களில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. காலை 11 மணி முதல் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. மதியம் ஒரு மணி வரை மழை நீடித்தது. இதனால் உடன்குடி மெயின் பஜார், பஸ்நிலையம் பஜார் வீதிகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உடன்குடி மெயின் பஜார் 4 ரோடு சந்திப்பை ஒட்டியுள்ள வாரச்சந்தை நேற்று கூடியிருந்தது. தாழ்வான பகுதியான வார சந்தை வளாகத்துக்குள் மழைநீர் பாய்ந்ததால், வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்