அமைச்சர் ரகுபதியிடம் ஊழல் தடுப்புப் பிரிவு இருப்பதே தவறு - எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் ரகுபதியிடம் ஊழல் தடுப்புப் பிரிவு இருப்பதே தவறு. ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

Update: 2023-07-08 08:58 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது அவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும்.

2024 மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அ.தி.மு.க. தொடங்கி விட்டது. பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை அ.தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. சட்ட அமைச்சர் ரகுபதி மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அமைச்சர் ரகுபதி ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசக்கூடாது. ஊழல் குறித்து கவர்னருக்கு கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை.அமைச்சர் ரகுபதியிடம் ஊழல் தடுப்புப் பிரிவு இருப்பதே தவறு.

ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதே சந்தேகம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்