இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ளபறக்கும் படை அதிகாரிகளின் செல்போன் எண் வெளியீடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகளின் செல்போன் எண் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2023-01-21 21:44 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகளின் செல்போன் எண் வெளியிடப்பட்டு உள்ளது.

பறக்கும் படை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி தேர்தல் விதி மீறல், பணம், பரிசு பொருட்கள் போன்றவற்றை கண்டறிந்து தடுத்தல், பறிமுதல் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

குழு 1, 2, 3 என 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழு 3 தினங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். இதில் ஒவ்வொரு குழுவும் தலா 8 மணி நேரம் என 24 மணி நேரமும் பணி செய்யும் வகையில் 3 அதிகாரிகள் தலைமையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

செல்போன் எண்கள்

ஒரு குழுவில் ஒரு அதிகாரி, ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், ஒரு புகைப்பட கலைஞர், ஒரு டிரைவர் என 6 பேர் உள்ளனர். அவர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

குழு 1-ல் அதிகாரிகளாக சையது முஸ்தபா –97894 09782, பழனிசாமி – 95663 02601, அருள்மொழிவர்மன் – 99943 01546 ஆகியோர் தலைமையில் தனித்தனியாக குழு செயல்படும். குழு 2-ல் அதிகாரிகளாக கோபால் – 94426 12770, அசோக்குமார் – 98427 73296, இளங்கோ – 79044 90784 என 3 அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு செயல்படும்.

வாகன சோதனை

குழு 3-ல் அதிகாரிகளாக சந்திரசேகரன் – 98944 08906, செந்தில்குமார் – 99947 87937, சண்முகசுந்தரம் – 99524 95399 ஆகியோர் தலைமையில் தனித்தனி குழு செயல்படும். மேலும் 9 அதிகாரிகள் கொண்ட நிலை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் வெவ்வேறு இடங்களில் கண்காணிப்பு பணிகள், சோதனைகள் மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில் நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோணவாய்க்கால் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வாகனத்தில் பணம், பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா? என்று சோதனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்