இன்று நடந்த பிளஸ்-2 ஆங்கில தேர்வில் 49,000 மாணவர்கள் ஆப்சென்ட் என தகவல்..!
பிளஸ்-2 மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று நடந்த பிளஸ் 12 ஆங்கில தேர்வில் 49,000 மாணவர்கள் ஆப்சென்ட் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாள் தேர்வுக்கு வராத மாணவர்கள் இன்றைய தேர்வுக்கும் வரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், பதினோராம் வகுப்பு அரியர் பாட தேர்வுகள் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு இரண்டையும் சேர்த்து எழுத வேண்டும் என்பதால் , தேர்வுக்கு வரவில்லை என்று கல்வித்துறை தகவல் . மேலும் மாணவர்கள் பள்ளிகளுக்கே வராததால், தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறப்படுகிறது.