திருத்தணி கோவிலுக்கு மலைப்பாதையில் செல்ல அனுமதியில்லை - கோவில் நிர்வாகம் தகவல்
நாளை முதல் வரும் 20-ஆம் தேதி வரை கோவிலுக்கு செல்ல பக்தர்கள் படிவழியினை மட்டுமே பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.;
திருத்தணி,
மண்சரிவு காரணமாக திருத்தணி முருகன் கோவிலுக்கு மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதையின் தடுப்புச் சுவர் மிக்ஜம் புயல் காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக அனைத்து ரக வாகனங்கள் செல்ல 11.12.2023 முதல் 16.12.2023 வரை தடைவிதிக்கப்பட்டு மலைப்பாதை மற்றும் படிவழியில் நடந்து செல்ல அனணுமதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் லேசாக மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதியில்லை. 14.12.2023 முதல் 20.12.2023 வரை பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல படிவழியினை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள திருக்கோவில் நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.