காலை உணவுத் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2022-09-16 05:26 GMT

சென்னை,

மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியது. 5ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

கடந்த ஜனவரி முதல் இப்போது வரை 9 குழந்தைகள் எச்1 என்1 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த 

வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அதிமுக ஆட்சியில் தான் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம். சர்.பிட்டி.தியாகராயர்,காமராஜர், எம்.ஜி.ஆர்,கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டுவந்துள்ளார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்