கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும்பயன்பாட்டுக்கு வராத கழிப்பறைகள்

கடமலைக்குண்டுவில் கழிப்பறைகள் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இ்ன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

Update: 2023-01-23 18:45 GMT

கடமலைக்குண்டுவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார நிலையம் அருகே கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால் இந்த கழிப்பறைகள் கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதனால் பொதுமக்கள் தொடர்ந்து சாலையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து பயன்பாடு இல்லாமல் காணப்படுவதால் கழிப்பறைகளை சுற்றிலும் மரம், செடிகள் ஆக்கிரமித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் கட்டிடம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு இடிந்து விடும் சூழ்நிலை உருவாகிவிடும். எனவே கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்