ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-02 20:49 GMT

மலைக்கோட்டை:

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள தஞ்சாவூர் குளத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தாரண்யா(வயது 28). எம்.காம் பட்டதாரியான இவர் திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கழுத்து மற்றும் தலையில் அடிக்கடி வலி இருந்ததாகவும், இதற்காக உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றும் வலி குறையாததால் விரக்தியடைந்த நிலையில் இருந்த தாரண்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்