பரமக்குடி
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கான்சன்டாம் ஜாய் (வயது 34). இவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், நண்பர் ஜெயபால் பைசல் என்பவருடன் காரில் திருவனந்தபுரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பினர். இரவு ஆகி விட்டதால் சத்திரக்குடி டோல்கேட் அருகே காரை நிறுத்திவிட்டு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், கான்சன்டாம் ஜாய் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.