ஐ.டி. நிறுவன காவலாளியிடம் செல்போன்-பணம் பறித்த 3 பேர் கைது
ஐ.டி. நிறுவன காவலாளியிடம் செல்போன்-பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாயனூர் காசா காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 51). இவர் கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று சண்முகசுந்தரம் ஐ.டி. நிறுவனத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த வினோத் (21), ராயனூரை சேர்ந்த குடியரசு (22), மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த உதய பிரகாஷ் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து சண்முகசுந்தரத்தை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.