ஆக்சிஜன் முககவசத்துக்கு 'டீ கப்பை' பயன்படுத்திய விவகாரம்: உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் மாணவனுக்கு ஆக்சிஜன் முககவசத்துக்கு 'டீ கப்பை' பயன்படுத்தியது பற்றி கேட்டறிந்தார்.;

Update:2023-08-03 16:14 IST

உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த மாணவனுக்கு ஆக்சிஜன் முககவசத்திற்கு பதிலாக காகித 'டீ கப்பை' பயன்படுத்தியது தொடர்பாக புகார் எழுந்தது.

இது சம்பந்தமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள வசதிகள் பற்றி டாக்டரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சைக்கு வந்த மாணவனுக்கு ஆக்சிஜன் முககவசத்திற்கு பதிலாக காகித 'டீ கப்பை' பயன்படுத்தியது பற்றி கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். கலெக்டருடன் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்