குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

Update: 2022-05-27 15:26 GMT

சென்னை,

குரூப்-2 மற்றும் 2 ஏ பதவிகளில் உள்ள 5 ஆயிரத்து 529 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.

அதன்படி இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து இருந்தனர். குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த 21-ந் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 1.5 லட்சத்துக்கும் கூடுதலான தோ்வா்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். ஆனால், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 285 போ் தோ்வை எழுத வரவில்லை. 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் மட்டும் தோ்வினை எழுதினா்.

தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்தது.

இந்த நிலையில், 9.94 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

உத்தேச விடைக்குறிப்பில் ஏதும் ஆட்சேபனைகள் இருப்பின், ஒரு வார காலத்துக்குள் தேர்வாணைய இணையளத்தில் அதை பதிவு செய்யலாம் என்றும் தேர்வர்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு, ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்