13 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் பராமரிப்புக்கான உத்தரவு ஆணை வழங்கல்

13 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் பராமரிப்புக்கான உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

Update: 2022-05-29 17:40 GMT

குளித்தலை,

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2021 - 2022) தொகுப்பு வீடுகள் பராமரிப்பு செய்யும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையொட்டி பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் பராமரிப்பு செய்யும் பணிக்கான வேலை உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு இரா. மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணைகளை வழங்கினார். இதில் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வதியம், பொய்யாமணி, சூரியனூர் ஊராட்சி பகுதியில் வசிக்கும் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை உத்தரவு ஆணை வழங்கப்பட்டது. இதில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்