இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வட்டகானலுக்கு வருகை - போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
வட்டக்கானல் பகுதிக்கு இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்கு இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அங்கு அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சபாத் என்னும் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் வட்டக்கானல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.