இஸ்லாமிய ஐக்கிய பேரவை கூட்டம்
ஏரலில் இஸ்லாமிய ஐக்கிய பேரவை கூட்டம் நடந்தது.;
ஏரல்:
ஏரலில் இஸ்லாமிய ஐக்கிய பேரவை கூட்டம் அங்குள்ள முஸ்லிம் கம்யூனிட்டி மஹாலில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அஷ்ரப் அலி பைஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய தலைவராக பைசல் அகமது, துணைத்தலைவராக ஆசிக் ரகுமான், செயலாளராக அகமது தெளபிக், துணைச் செயலாளராக சவுபர் ஜாதிக், பொருளாளராக முகமது அப்துல் காதர், கவுரவ ஆலோசர்களாக முகைதீன் அரபாத் ஆதி அலிம், சதுகத்ததுல்லாஹ் உஸ்மானி ஆலிம், அஷ்ரப் அலி பைஜி ஆலிம், ஜாகிர் உசேன் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் சமுதாயப் பணிகள் செய்வதும், பேரிடர் தேவையான மீட்புக் குழு, கஷ்டப்படுவர்களுக்கு உதவி செய்வது, ஒற்றுமைக்கு பாடுபடுவது உள்ள பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஜமாத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.