இசக்கியம்மன் கோவில் கொடை விழா
தட்டார்மடம் இசக்கியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
சாத்தான்குளம்:
தட்டார்மடம் மீன்கடை இசக்கியம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவில் மாக்காப்பு தீபாராதனை நடந்தது. 2-ம் நாள் காலையில் நடுவக்குறிச்சி முத்தாரம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் யானையுடன் ஊர்வலமாக வந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
காலையில் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருதல், கும்பாபிஷேகம், மதிய கொடை, மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் அலங்கார தீபாராதனை, சாமக்கொடை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.