மதுரைக்கு ஒதுக்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை விட முதல்-அமைச்சர் தயாரா?

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மதுரைக்கு ஒதுக்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை விட முதல்-அமைச்சர் தயாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-12-09 20:59 GMT

சோழவந்தான்,

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மதுரைக்கு ஒதுக்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை விட முதல்-அமைச்சர் தயாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடந்த அ.தி.மு.க.ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது 40 ஆயிரம் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் உயர்த்தாத விலைவாசி உயர்வுக்கு தான் போராட்டத்தை ஸ்டாலின் நடத்தினார். தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின் கட்டணம் உயர்வு இல்லை. சொத்து வரி உயர்வு இல்லை. மதுரை மாநகராட்சிக்கு ஒரு பைசா கூட தி.மு.க. அரசு நிதி ஒதுக்கவில்லை. இதுவரை மதுரைக்கு ஒதுக்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை விட முதல்-அமைச்சர் தயாரா?. கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து ெகாண்டவர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் வாடிப்பட்டி பேரூராட்சி செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கழகச்செயலாளர் கொரியர் கணேசன், நகர செயலாளர் முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சோனை, ஒன்றிய அவைத் தலைவர் ஆர்.எஸ்.ராமசாமி, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ.கே.பி. சிவசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்