சி.வி.சண்முகத்தை 3-ம் கட்ட தலைவர் என்பதா?

சி.வி.சண்முகத்தை 3-ம் கட்ட தலைவர் என்பதா? என முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-21 21:15 GMT

தாயில்பட்டிசி.வி.சண்முகத்தை 3-ம் கட்ட தலைவர் என்பதா?

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியில், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட முடியும். பா.ஜ.க.வை தோழமை கட்சியாக மட்டும் தான் பார்க்கிறோம். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வளரக்கூடிய அரசியல் தலைவர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை 3-ம் கட்ட தலைவர் என விமர்சனம் செய்த அண்ணாமலையை கண்டிக்கிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் பட்டாசு தொழில் முடங்கி, பட்டாசு உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்க்காமல் தி.மு.க. அரசு ஒதுங்கி நிற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்