ராகுல் காந்தியை கண்டு பாஜக அஞ்சுகிறதா? - முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி

ராகுல் காந்தியை கண்டு பாஜக அஞ்சுகிறதா என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-08-06 15:23 GMT

சென்னை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரிம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து எம்.பி. பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் இருப்பை கண்டு பாஜக அஞ்சுகிறதா என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ராகுல்காந்தி மீதான தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தும் ஏன் மீண்டும் எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை திரும்ப பெறவில்லை? அவரை தகுதி நீக்கம் செய்ய காட்டிய அவசரம் ஏன் இப்போது இல்லை? பாராளுமன்றத்தில் சகோதரர் ராகுல்காந்தியின் இருப்பை கண்டு பாஜக அஞ்சுகிறதா?" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்