நாகர்கோவிலில் 370 கிலோ காரை தூக்கி 25 மீட்டர் தூரம் நடந்து சென்ற இரும்பு மனிதன்

நாகர்கோவிலில் 370 கிலோ காரை இரும்பு மனிதன் தூக்கி 25 மீட்டர் தூரம் நடந்து சென்றார்.

Update: 2023-01-29 21:03 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). தமிழகத்தின் இரும்பு மனிதனான இவர், உடல்வலு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் 2020-ம் ஆண்டுக்கான இரும்பு மனிதன் போட்டியில் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

இந்தநிலையில் இவர் 370 கிலோ காரை தூக்கி நடந்து செல்லும் சாதனை நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து 370 கிலோ எடை கொண்ட காரை கண்ணன் தூக்கிய படி 25 மீட்டர் தூரம் நடந்து சென்றார். அப்போது அவரை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து ஊக்குவித்தனர். சாதனை படைத்த கண்ணனை பொதுமக்கள் பாராட்டினர். இவரது சாதனை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்