அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை
அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.
ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று கரூர் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பித்து கொள்வது, தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், மழை, வெள்ளம், புயல் போன்ற சமயங்களில் எப்படி தற்காத்து கொள்வது என்பன போன்ற பல்வேறு தீத்தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பெரிய அளவில் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் எப்படி தகவல் தெரிவிக்க வேண்டும், அதற்கான தொலைபேசி எண்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டன. இதில் பள்ளி தலைமை ஆசிரியை ரமா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.