ஐராவதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஐராவதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-06-10 18:50 GMT

விக்கிரமங்கலம் 

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள அயன்அம்பாப்பூர் கிராமத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, லட்சுமி, கணபதி மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்ற பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு காலை 8 மணிக்கு மேல் சமேத ஐராவதீஸ்வரர், விநாயகர், மாரியம்மன், காளியம்மன் ஆகிய ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு சுவாமி வீதிஉலா நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அயன் அம்பாப்பூர் கிராம நாட்டாமைகளும், முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்