இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா

கோவில்பட்டியில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா நடந்தது.

Update: 2022-07-07 17:00 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி புதுரோடு அம்பேத்கர் சிலை முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசன் 163-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் தாவீது ராஜா தலைமை தாங்கி, இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தாமோதரன், நகர தலைவர் ஜெயமணி, ஒன்றிய தலைவர் அந்தோணி முத்து மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்