இரட்டை மலை சீனிவாசன், மறைமலையடிகள், காமராஜர் பிறந்த நாள் விழா

இரட்டை மலை சீனிவாசன், மறைமலையடிகள், காமராஜர் ஆகியோரின் பிறந்த நாள் விழா பெரம்பலூரில் தமிழ் வழிக்கல்வி இயக்கத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2022-07-09 19:38 GMT

இரட்டை மலை சீனிவாசன், மறைமலையடிகள், காமராஜர் ஆகியோரின் பிறந்த நாள் விழா பெரம்பலூரில் தமிழ் வழிக்கல்வி இயக்கத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து பரப்புரை நடந்தது. இதற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் தேனரசன் தலைமை தாங்கினார். டாக்டர் கருணாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இயக்கத்தின் தலைவர் சின்னப்பத்தமிழர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு பள்ளிகளில் திணிக்கப்பட்ட ஆங்கில வழியை நீக்கி, ஆங்கில பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், 25 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்தவர்களையே அரசு கல்லூரிகளில் சோ்க்க வேண்டும். தமிழக வேலை தமிழர்களுக்கு கிடைக்க தமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள், தனியார் எதுவாயினும் போட்டி வேலை தேர்வு மட்டுமே நடத்த வேண்டும். இயற்கை, சுற்றுச்சூழல், கனிம வளம், தற்சார்பு அறிவியல் தமிழ் வழிக்கல்வியாக 100 சதவீதம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பரப்புரையில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக காமராசு வரவேற்றார். முடிவில் செந்தில்குமரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்