ஐ.பி.எல். 'பிளே ஆப்' சுற்று போட்டிகள்: 23, 24-ந்தேதிகள் போக்குவரத்து மாற்றம்
சேப்பாக்கம் பகுதியில் ஐ.பி.எல். ‘பிளே ஆப்’ சுற்று போட்டிகள் நடைபெறுவதால் 23 மற்றும் 24-ந்தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை,
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். மீதமுள்ள போட்டிகள் (பிளே-ஆப் சுற்று) 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த 2 நாட்களில் போட்டி முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
* போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா பாயிண்ட் வழியாக கொடி மரச் சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.
* காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் நோக்கி உள்வரும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை அருகே திருப்பி விடப்பட்டு ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.
கண்ணகி சிலை
* தொழிலாளர் சிலையில் இருந்து வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது மாறாக கண்ணகி சிலையை நோக்கி திருப்பி விடப்படும்.
* அண்ணா சிலை அருகே, வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது, வெலிங்டன் பாயிண்ட்-பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.
* பாரதி சாலை- பெல்ஸ் சாலை சந்திப்பில், வாகனங்கள் பெல்ஸ் சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது மற்றும் கண்ணகி சிலை (அல்லது) ரத்னா கபே சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.
* பேட்டா பாயிண்டில், வெளிச்செல்லும் வாகனங்கள் யு டர்னில் செல்ல அனுமதியில்லை. அதற்கு பதிலாக, வாகனங்கள் லிங்டன் பாயிண்ட் வரை செல்ல அனுமதிக்கப்படும். அங்கிருந்து வாகனங்கள் வலதுபுறம் டேம்ஸ் சாலை வழியாக ஸ்பென்சர்ஸ் சந்திப்பு நோக்கி நேராக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.