ஐ.பி.எல். போட்டிகள் நடத்த தடை கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

ஐ.பி.எல். போட்டிகள் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சம்பத்குமார் ஐ.பி.எஸ். வழக்கு தொடர்ந்தார்.

Update: 2023-07-26 17:15 GMT

சென்னை,

சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தில்(பி.சி.சி.ஐ.) எந்த விதிகளும் உருவாக்கப்படவில்லை என்றும், எனவே ஐ.பி.எல். போட்டிகள் நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சம்பத்குமார் ஐ.பி.எஸ். என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடப்பது தெரிந்தால், இந்திய கிரிக்கெட் வாரிய குழுவை அணுகி புகார் கொடுத்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், ஐ.பி.எல். போட்டிகள் நடத்த தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்