ரூ.3 கோடி, 1½ கிலோ நகைகள் பறிப்பு சம்பவம்:காரைக்குடியில் டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு முகாமிட்டு விசாரணை

ரூ.3 கோடி, 1½ கிலோ நகைகள் பறிப்பு சம்பவம் தொடர்பாக காரைக்குடியில் டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2023-03-13 18:45 GMT

காரைக்குடி,

காரைக்குடி சோமு பிள்ளை தெருவில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 42) இவர் காரைக்குடியில் உள்ள நகை வியாபாரிகளுக்காக அவர்களிடம் தங்க கட்டிகளை பெற்றுக் கொண்டு சென்னை சென்று சவுகார்பேட்டையில் உள்ள நபர்களிடம் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்வார். மேலும் புதிய நகைகளுக்கான ஆர்டர் செய்து அவற்றை பெற்றுக் கொண்டு திரும்பி அவற்றை நகை வியாபாரிகளிடம் ஒப்படைப்பது வழக்கம்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் சென்னையில் இருந்து ரூ.3 கோடி மற்றும் 1½ கிலோ தங்க நகைகளோடு ஆம்னி பஸ்சில் காரைக்குடி வந்தபோது சொகுசு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தங்களை போலீஸ் என்று கூறி ரவிச்சந்திரனை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று அவரிடமிருந்த 1½ கிலோ தங்க நகைகள் ரூ.3 கோடியை பறித்துக் கொண்டு அவரை புதுக்கோட்டை அருகே உள்ள லேனா விலக்கில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றது.

இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையிலான 3 தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் காரைக்குடியில் முகாமிட்டு கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்