பாப்பிரெட்டிப்பட்டி அருகேதொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளி மர்ம சாவு அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஜம்மனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் கோவைக்கு வேலைக்கு சென்று விட்டு ஊருக்கு வந்தார். மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே செல்வம் உடலில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.