கம்பைநல்லூர் அருகேலாரி கவிழ்ந்து விபத்து;சாலையோரம் நின்றவர் சாவுபோலீஸ் விசாரணை

Update: 2023-09-04 19:30 GMT

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நின்றவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே சின்னாகவுண்ம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தீத்தான். இவருடைய மகன் பொன்முடி (வயது 52). இவர் நேற்று இரவு அண்ணாமலைப்பட்டி கிராமத்திற்கு சென்று பாலை ஊற்றி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அந்த வழியாக மொரப்பூரை நோக்கி உருளை கிழங்கு பாரம் ஏற்றி வந்த லாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது.

பரிதாப சாவு

லாரியின் அடிப்பகுதியில் பொன்முடி சிக்கிக் கொண்டார். அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். லாரியின் அடியில் சிக்கி இருந்த பொன்முடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்