சென்னை ஐ.ஐ.டி.யில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்

தரவுகளின் அடிப்படையில் மேலாளர்கள் முடிவு எடுக்க சென்னை ஐ.ஐ.டி.யில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்.

Update: 2023-08-14 18:42 GMT

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் மேலாளர்களுக்கு பயிற்சி அளிக்க 'மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான செயல்பாடுகள் மற்றும் வினியோக சங்கிலி பகுப்பாய்வு' என்ற சான்றிதழ் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யின் 'சென்டர் பார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜூகேஷன்' இந்த பாடத்திட்டத்தை வழங்குகிறது. இந்த பாடத்திட்டம் தற்போது தொழில்துறை எதிர்கொள்ளும் பெரும்பாலான செயல்பாடுகள் மற்றும் வினியோக சங்கிலி சிக்கல்கள் குறித்து விரிவான நுண்ணறிவை வழங்கும்.

இந்த பாடத்துக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட தகுதி அளவுகோல் எதுவும் இல்லை என்றாலும், கணிதம் மற்றும் புள்ளியல் கருத்துகளின் அடிப்படை புரிதல் இதற்கு அவசியமாகிறது. இதில் பங்கேற்போர் பகுப்பாய்வு மாதிரி உருவாக்கம் மற்றும் தரவு சார்ந்த முடிவுகளை எடுப்பதில் ஆர்வத்தோடு இருப்பது நல்லது. விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு வருகிற செப்டம்பர் 20-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. மேலாண்மை கல்வித்துறை பேராசிரியர் ராகுல் மராத்தே கூறுகையில், "தரவு சார்ந்த முடிவெடுக்கும் திறன், தற்போது நிறுவனங்களின் முக்கிய திறமையாக கருதப்படுகிறது. 'முடிவெடுக்கும் அறிவியல்' மேலாளர்களுக்கு உகந்த முடிவுகளை எடுக்க தேவையான கட்டமைப்பை உருவாக்க உதவும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்