மதுபோதையில் போலீஸ்காரரின் சட்டையை பிடித்த வாலிபர் கைது

பணகுடியில் மதுபோதையில் போலீஸ்காரரின் சட்டையை பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-13 20:30 GMT

பணகுடி:

பணகுடி கிருஷ்ணன் நகரை சேர்ந்த ராமன் என்பவருடைய மகன் பாரதி (வயது 25). இவர் பணகுடி ராமலிங்க சுவாமி கோவில் அருகே மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே பாதுகாப்பிற்கு நின்ற 2 போலீசார், ஏன் தகராறு செய்கிறாய்? என்று கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாரதி, ஒரு போலீஸ்காரரின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்குப்பதிவு செய்து பாரதியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்