சிதம்பரத்தில்மாணவிகள் விடுதிக்குள் புகுந்து காதலிக்க வற்புறுத்தி பயிற்சி டாக்டருக்கு மிரட்டல்வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
சிதம்பரம் மாணவிகள் விடுதிக்குள் புகுந்து பயிற்சி டாக்டரை காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அண்ணாமலைநகர்,
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் அண்ணாமலைநகரில் உள்ள டைமன்ட் ஜூப்லி மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் பயிற்சி டாக்டரின் சொந்த ஊரைச் சேர்ந்த குட்டிதம்பி என்கிற வெங்கடேசன் (23) நேற்று காலை மாணவிகள் விடுதிக்குள் புகுந்தார்.
பின்னர் அவர், பயிற்சி டாக்டரிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்றும், நீ தன்னை தான் காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். மேலும் பயிற்சி பெண் டாக்டரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பயிற்சி டாக்டர், அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தேடி வருகின்றனர்.