அழகு நிலைய பெண் உரிமையாளருக்கு மிரட்டல்
அழகு நிலைய பெண் உரிமையாளருக்கு மிரட்டல்
பீளமேடு
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 47 வயது பெண், அழகு நிலையம் நடத்தி வருகிறார். அவர், கடந்த 29-ந் தேதி அந்த அழகுநிலையத்தில் இருந்த போது ஏற்கனவே அறிமுகமான 3 பெண்கள் உள்பட 4 பேர் வந்தனர். அவர்கள் அந்த பெண்ணிடம் திடீரென பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து பணம் தரவில்லையென்றால், உன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர்.
இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார், அந்த பெண்ணை மிரட்டிய ரீச்சல், செலீனா, ராஜகுமாரி மற்றும் ஒரு ஆண் ஆகிய 4 பேர் மீது மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.