காதல் திருமணம் செய்த தம்பதிக்கு மிரட்டல்
ஆத்தூரில் காதல் திருமணம் செய்த தம்பதிக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர்
ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது53). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கலா. இவர், ஆத்தூர் டவுன் போலீசில் கொடுத்த மனுவில், எங்களுடைய மகன் சஞ்சய், ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். தற்போது மந்தைவெளி பகுதியை சேர்ந்த கண்ணையன், ரமேஷ், சுரேஷ் ஆகிய 3 பேரும் என்னுடைய மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணையன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.