நகராட்சி அதிகாரிக்கு மிரட்டல்

நகராட்சி அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Update: 2022-12-07 18:45 GMT

சிவகங்கை பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள ஒரு கடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள கடைகளில் சிலர் அனுமதியின்றி கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாகவும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் புகார் வந்தது. இதையடுத்து நேற்று நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகராட்சி நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலர் திலகவதி தலைமையிலான ஊழியர்கள் அங்கு சென்று வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்ததுடன் ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

அப்போது அங்கு வந்த நகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவர் தன்னுடைய பொருட்களை யார் அகற்றியது என கேட்டு நகரமைப்பு அலுவலர் திலகவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தை ஊழியர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சிவகங்கை பகுதியில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்