தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை

தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை என எச்.ராஜா கூறினார்.

Update: 2022-11-29 18:45 GMT

மானாமதுரை, 

திருப்பாசேத்தி அருகே தஞ்சாகூர் கிராமத்தில் ஜெகதீஸ்வரர் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி எல் அண்ட் டி நிறுவனம் சார்பில் மேலாளர் ஜெய்சங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் (தி.மு.க.) முடிவு பண்ண முடியாது. தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். அதற்கு காரணம் டாஸ்மாக். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கையெழுத்தாக இருக்கும் என கனிமொழி சொன்னார். ஆனால் இப்போது இன்னும் 500 கடைகள் அதிகமாக திறந்திருக்கிறார்கள். பா.ஜ.க., தி.மு.க.வை வேரோடு கலைவதற்கான அனைத்து செயல்களையும் செய்யும். தமிழகத்தில் தினமும் கொலைகள், குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்