தொழில் செய்ய விண்ணப்பித்திருந்த பயனாளிகளிடம் நேர்காணல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் செய்ய விண்ணப்பத்திருந்த பயனாளிகளிடம் நேர்காணல் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.

Update: 2023-06-14 11:14 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் செய்ய விண்ணப்பத்திருந்த பயனாளிகளிடம் நேர்காணல் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.

நேர்காணல்

ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையத்தின் புதிய தொழில் முனைவோர் திட்டம் மற்றும் அம்பேத்கர் தொழில் முனைவோர்-பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் தொழில் செய்வதற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்ேபாது அவர் பேசியதாவது:-

மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசின் மானிய உதவியுடன் வங்கி கடன் வழங்கி தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விண்ணப்பித்த 5 பயனாளிகளுக்கு நேர்முக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த பயனாளிகளும் பொக்லைன் எந்திரம் வாங்க விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் ரூ.20 லட்சம் முதல் ரூ.38 லட்சம் வரையிலான வங்கி கடன் உதவிகள் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ரூ.50 லட்சம் வரை...

அதேபோல அம்பேத்கர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அவர்கள் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரையிலான வங்கி கடன் உதவிகள் கோரி விண்ணப்பித்திருந்தனர்.

மேலும் மருத்துவ பரிசோதனை மையம், எர்த் மூவிங் எக்யூப்மென்ட், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் வாங்கி தொழில் செய்ய விண்ணப்பித்திருந்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் தலைமையிலான குழு, பயனாளிகளிடம் தொழில் செய்வது குறித்தும், எந்த வங்கியில் விண்ணப்பம் அளித்து உள்ளீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் தொழில் செய்வதற்கான திட்ட அறிக்கை மற்றும் அதற்கான அனைத்து ஆவணங்களையும் நேர்முக கலந்தாய்வு கூட்டத்தில் கேட்டறிந்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகள் பின்னர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் மற்றும் வங்கியாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்