மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யே செல்போன் வழங்க நேர்க்காணல்

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யே செல்போன் வழங்க நேர்க்காணல் நடந்தது.

Update: 2023-02-02 18:30 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக செல்போன் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்து நேர்காணல் கூட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோருக்கான மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 91 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்