சிறைத்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான நேர்முகத்தேர்வு
வேலூரில் சிறைத்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
சிறையில் பணிபுரியக்கூடிய துணை சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர், முதல் தலைமை காவலர் ஆகிய பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு வேலூர் சிறை கவாத்து மைதானத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்றது.
நேர்முகத் தேர்வு தேர்வுக் குழு தலைவர் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களான சென்னை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன், திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் மற்றும் வேலூர் டி.ஐ.ஜி. செந்தாமரைகண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகளில் பணியாற்றும் 98 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் நேர்முகத்தேர்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் சிறை சூப்பிரண்டு அப்துல் ரகுமான் செய்திருந்தார்.