தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்

தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

Update: 2022-08-26 15:29 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் கேட்டு இணையதளத்தில் விண்ணப்பித்த 127 பேர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நேர்காணலில் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் தாங்கள் மேற்கொள்ள உள்ள தொழில் குறித்தான அனுபவம் உள்ளிட்டவற்றை கலெக்டர் கேட்டறிந்ததுடன் கடனுதவி கேட்டு சமர்பித்த சான்றுகளை சரிபார்த்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட தொழில் மைய மேலாளர் தாமோதரன், தாட்கோ மேலாளர் குப்புசாமி, முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், உதவி மகளிர் திட்ட அலுவலர் முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்