இரவில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிய 8 பேரிடம் விசாரணை

மேலப்பாளையத்தில் இரவில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிய 8 பேரிடம் விசாரணை நடத்தினர்.

Update: 2023-01-22 21:34 GMT

மேலப்பாளையம்:

நெல்லை மாநகரில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்களில் சிலர் சுற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிள்களின் வாகன எண்ணை கொண்டு 8 சிறுவர்களை பிடித்தனர். அவர்களை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்