சர்வதேச மகளிர் தினவிழா

காதுகேளாதார் முன்னேற்ற சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா நடைபெற்றது.

Update: 2023-03-12 18:07 GMT

வேலூர் மாவட்ட காதுகேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சரவணன், சங்க துணைத்தலைவர் கலைச்செல்வன், வக்கீல் ஸ்ரீதர் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கோபி வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, வேலூர் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி ஆகியோர் கலந்துகொண்டு பெண்களின் சிறப்புகள் பற்றி பேசினார்கள்.

தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்