சர்வதேச டேக்வாண்டோ போட்டி:இந்திய அணிக்கு தேர்வான தூத்துக்குடி வீராங்கனைக்கு பாராட்டு

சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் விளையாட இந்திய அணிக்கு தேர்வான தூத்துக்குடி வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-08-21 18:45 GMT

சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தேர்வு பெற்ற தூத்துக்குடி மாவட்ட வீராங்கனையை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார். மேலும் தேசிய இளையோர் எறிபந்து போட்டியில் சாதனை படைத்த மாணவர்களையும் கலெக்டர் வாழ்த்தினார்.

டேக்வாண்டோ போட்டி

இந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டி மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடந்தது. இதில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 144 சென்டி மீட்டர் உயரப் பிரிவில் காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.எல்.மகிஷா பிரியங்கா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று இந்திய அணிக்கு தேர்வு பெற்று உள்ளார். இவர் வருகிற 28-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை ஐரோப்பா சரோஜ்வா, போஸ்னிகா என்னும் இடத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொள்ள உள்ளார். அதே போன்று 5.9.2023 முதல் 8.9.2023 வரை லெபனானில் நடைபெற உள்ள 5-வது ஆசிய அளவிலான டேக்வோண்டா போட்டியிலும் இந்திய அணி சார்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவரை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று பாராட்டினார்.

எறிபந்து

மேலும் 28-வது தேசிய இளையோர் எறிபந்து போட்டி புதுச்சேரியில் நடந்தது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் தூத்துக்குடி கமாக் உர்யநிலைப்பள்ளி மாணவர்கள் கே.செந்தில், பி.திவா, கே.யஸ்வந்த் குமார், ஏ.ஆகாஷ், மாணவி பிளஸ்சி ஷேரன் ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டு 2-ம் இடம் பெற்று உள்ளனர். மேலும், தேசிய இளையோர் எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றதற்காக மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், துணை கலெக்டர் (பயிற்சி) பிரபு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், டேக்வாண்டோ பயிற்சியாளர் ராமலிங்கபாரதி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்