காந்தி மியூசியத்தில் சர்வதேச கருத்தரங்கம்

காந்தி மியூசியத்தில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

Update: 2023-05-28 19:51 GMT

மதுரை,

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் "யோகா மற்றும் மாற்று மருத்துவம்" எனும் தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது. கருத்தரங்கிற்கு காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் பொருளாளர் வக்கீல் செந்தில் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குமார் கலந்து கொண்டு கருத்தரங்க மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். கருத்தரங்க மலரின் முதல், இரண்டாவது பிரதிகளை கேரளாவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள லட்சுமி பாய் தேசியக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் மகேந்திர சாவன்ட் மற்றும் எத்தியோப்பியா பேராசிரியர் சேனாதிபதி பெற்றுக் கொண்டு பேசினர்.

இதில் அருங்காட்சியக செயலாளர் கே.ஆர். நந்தாராவ், எத்தியோப்பியா பேராசிரியர் சேனாதிபதி, மதுரை மருத்துவக்கல்லூரியின் டாக்டர் ராணி நாச்சியார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக இந்த கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வருமான ஆர்.தேவதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். யோகா மாணவர் பேவிட் நன்றி கூறினார். அருங்காட்சியக யோகா மாணவி உமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், யோகா மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகள் வாசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்