கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
எட்டயபுரம் அருகே தொன் போஸ்கோ கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோரின் தொழில் தொடக்க கலாசாரம் மற்றும் வளர்ச்சி என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலர் விக்டர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் திலகா, அருட்தந்தை பீட்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முனைவர் ராஜன் மற்றும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் மற்றும் தொழில் தொடங்குவதற்கான செயல்பாடுகள் குறித்து பேசினா்.
கருத்தரங்கில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் வடகொரியா நாட்டைச்சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. மேலும் கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் அருட்தந்தையர்கள் அலெக்ஸாண்டர் சுரேஷ், தாமஸ் அல்போன்ஸ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வணிகவியல் துறை மற்றும் நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் அந்தோணி சாமி, பிரபு, பொன்மணி, மகாராஜா, கார்த்திக், கண்மணி, ரஹ்மான் மற்றும் நிவேதா செய்திருந்தனர்.