சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலையில் சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்;

Update: 2022-09-19 18:16 GMT

திருவண்ணாமலை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை வழியாக திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சென்றடைந்தது.

அப்போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷமிட்டபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பி.காமராஜ், உதவி பொறியாளர் எஸ்.சுகாசினி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, உதவி கலெக்டர் வீ.வெற்றிவேல், தி.மு.க. நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்