சர்வதேச செவிலியர் தின விழா
திருச்செந்தூர் பி.ஜி. ஆஸ்பத்திரியில் சர்வதேச செவிலியர் தின விழா நடைபெற்றத.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பி.ஜி. ஆஸ்பத்திரியில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அ.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மகப்பேறு டாக்டர் ஆர்.ருக்மணி முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி டாக்டர் பொன்ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மகப்பேறு டாக்டர் மலர்விழி குகன் செவிலியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், டாக்டர்கள் நிர்மல் ஆனந்த், ரேஷ்மாஜெமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பி.ஜி. ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் செய்திருந்தினர்.